Ticker

6/recent/ticker-posts

அரசின் ஊதுகுழல்களான ஊடகங்களுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்! ஊடகவியலாளர்களும் பங்கேற்பு

ரச ஊடகங்களான ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகியன அரசின் ஊதுகுழல்களாக செயற்படுவதைக் கண்டித்து மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஐக்கிய பிக்குமார் முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு -07ல் அமைந்துள்ள ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரச ஊடகங்களின் பக்கச்சார்பான செயற்பாடுகள் குறித்து கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
பொதுமக்கள் மட்டுமன்றி, அரசின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்றிருந்த ஊடகவியலாளர்கள் சிலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments