Ticker

6/recent/ticker-posts

அரசியல்வாதிகளின் பெயர்களில் பாடசாலைகள் பெயரிடப்படமாட்டாது: கல்வி அமைச்சர்

ரசியல்வாதிகளின் பெயர்களில் பாடசாலைகள் பெயரிடப்படமாட்டாது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் எந்தவொரு பாடசாலைக்கும் அரசியல்வாதிகளின் பெயர்கள் சூட்டப்பட மாட்டாது. 

தற்போதைய, கடந்த கால அல்லது எதிர்கால அரசியல்வாதிகளின் பெயர்களில் பாடசாலைகளையோ அல்லது பாடசாலை கட்டடங்களோ பெயரிடப்படுவதனை தவிர்க்கும் கொள்கை அடிப்படையிலான தீர்மானம் எடுக்கப்பட உள்ளது. எனினும், சீ.சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர போன்ற அதி முக்கியமானவர்களின் பெயர்களில் பாடசாலைகள் அல்லது கட்டடங்கள் பெயரிட நேர்ந்தால் மட்டும் விசேட அனுமதி பெற்றுக்கொள்ளப்படும். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரில் பல இடங்களில் பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த எந்தவொரு பாடசாலையினதும் பெயர் மாற்றப்பட மாட்டாது. எனினும் எதிர்காலத்தல் அரசியல்வாதிகளின் பெயர்களில் பாடசாலைகள் உருவாக்கப்பட மாட்டாது என அகில விராஜ் காரியவசம் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments