Ticker

6/recent/ticker-posts

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட ஜே.வி.பி தீர்மானம்

திர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட ஜே.வி.பி கட்சி தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தலின் போது எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி சேராது தனியாகவே மணி சின்னத்தில் போட்டியிட கட்சி தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவில்லை என்ற போதிலும் மக்களுக்கு தேவையான சேவைகளை ஆற்ற தேசிய நிறைவேற்றுப் பேரவையில் கட்சி அங்கம் வகிப்பதாக அறிவித்துள்ளது.
இந்தப் பேரவையின் ஊடாக மக்கள் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
எவ்வாறெனினும், தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்த இறுதித் தீர்மானம், திட்டவட்டமாக அறிவிக்கப்படும் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments