நாளை (08) நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில், கள்ள வாக்கு போடுதல் , வாக்குப் பெட்டிகளை மாற்றுதல், கணனி மோசடி போன்றவை நடைபெரும் என்ற கருத்து மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.
இம்முறை தேர்தலில் சர்வதேச கண்காணிப்புக் குழுவினர், உள்நாட்டு தேர்தல் கண்கணிப்பு குழுவினர் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் மேசடிகள் அற்ற நீதியான ஒரு தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் களத்தில் இறங்கியுள்ளனர். ஆகையால் இம்முறை தேர்தலில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இல்லை என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவிக்கையில், தேர்தல் முறைகேடு அல்லது வாக்குகளை கொள்ளையிடும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது உச்சகட்ட பலப்பிரயோகத்தை பிரயோகிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாரேனும் ஒருவருக்கு பொலிஸாரது பலத்தை சோதி்த்துப் பார்க்க வேண்டுமெனில் அவ்வறான செயற்பாடுகளில் ஈடுபட்டு பொலிசாரின் பலத்தை தெரிந்துகொள்ள முடியும் என்றார்.
ஆகக்குறைந்த பலப்பிரயோகமாக முழங்காலுக்குக் கீழே துப்பாக்கிச் சூடு நிகழ்த்த முடியும் எனவும் அதிஉச்ச பலப்பிரயோகமாக தலையில்கூட சுட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இம்முறை தேர்தலானது பாதுகாப்பான நேர்மையான ஒரு தேர்தலாக அமையவிருக்கும் எனவும் மக்கள் அனைவரும் தமது தேசிய அடையான அட்டை அல்லது கடவுச்சீட்டுடன் நாளை (08) வாக்குச்சாவடிகளுக்கு சென்று தமது வாக்குகளை அளிக்குமாறும்அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Comments