கடந்த 5ம் திகதி எதிரணி பொது வேட்பாளா் மைத்தியின் தோ்தல் பிரசாரத்திற்காக கஹவத்த என்ற இடத்தில் மேடையை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தவா்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது . இந்தத் தாக்குதலில் சாந்த தொடங்கொட என்ற நபா் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இரத்தினபுாி வைத்தியசாலை தீவிர கண்காணிப்புப் பிாிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளாா்.
இந்தக் கொலை தொடா்பாக சொக்கா மல்லி என்றழைக்ப்படும் பிரதியமைச்சா் பிரேமலால் ஜயசேகர சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினா் அருண நிலந்த ஜயசிங்க ஆகியோரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் பொலிஸாா் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

0 Comments