உக்ரைன்- ரஷ்யா அரசுகளுக்கிடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படுவதால் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அகற்ற வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொய்ஸ் ஹொலன்டே வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாதம் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் கிழக்கு உக்ரைனில் இடம்பெற்று வரும் மோதல்
தொடர்பில் பேச்சுவாரத்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதில் சாதக தன்மை காணப்பட்டால் ரஷ்யா மீது மேற்கத்தேய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கலாமென ஹொலன்டே தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் உக்ரைனின் கிரைமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்திருந்தது. இதனால் ஆத்திரமடைந்த சர்வதேச நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறுபட்ட பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்திருந்தது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை இந்த விடயம் த்து ஹொலன்டே பேசுகையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கிழக்கு உக்ரைனை ரஷ்யாவுடன் இணைக்கும் எண்ணம் இல்லை என தன்னிடம் தெரிவித்திருந்ததாக சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை அண்மைக் காலத்தில் கூட ஜேர்மன் துணை அதிபர் ரஷ்யா மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தார். இவை ரஷ்யாவிற்கு தண்டனை வழங்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத் தடைகளாகும்.
தற்போது ரஷ்யா, உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இடம்பெற்று வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒன்று கிடைக்குமென்று தான் நம்புவதாக ஹொலன்டே மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எமக்குத் தேவை உக்ரைனில் சமாதனமே தவிர ரஷ்யாவை முடக்குவது அல்ல என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் இம் மாதம் வருகின்ற 15 ஆம் திகதி பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் உக்ரைன் இணைந்து கஸகஸ்தானில் உச்சிமாநாடொன்றை நடத்தவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments