Ticker

6/recent/ticker-posts

மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அரசியலில் இருந்து விலகுவேன்: பந்துல குணவர்த்தன…!!

தனக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவேன் என முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த தகவலை அறிவித்தார்.

மஹிந்தோதய தொழில்நுட்பக் கல்லூரி கட்டுமானப் பணிகள் மூலம் பெருந்தொகையான பணம் மோசடி செய்யப்பட்டதாக முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
என்னை மோசடிக்காரன் என கல்வியமைச்சர் குறிப்பிட்டமை முற்றிலும் உண்மைக்குப் புறப்பானது. இதனை அவர் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்தால் மக்கள் மத்தியில் பொது மன்னிப்புக் கோரி அரசியலிலிருந்து விடைபெறுவேன்
தமக்கெதிராக சுமத்தியுள்ள பொய்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் மானநஷ்ட வழக்குத் தொடரப்போவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments