அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் 3 நாள் பயணமாக இந்தியா வருகை தந்தார். அவரது மனைவி மிச்செலும் உடன் வந்திருந்தார். குடியரசு தின விழாவில் பங்கேற்ற ஒபாமா ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.
ஒபாமாவின் இந்திய வருகை அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானை அச்சத்திலும், எரிச்சலிலும் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச பத்திரிகை மற்றும் ஊடகங்களில் ஒபாமாவின் இந்திய பயணம் குறித்த செய்திகளே முக்கிய இடம் பிடித்தன.
இதனால் கடும் எரிச்சல் அடைந்துள்ள சீனா இந்தியாவுக்கு போட்டியாக தனது நாட்டின் ராணுவ அணி வகுப்பில் வெளிநாட்டு தலைவரை பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி அமெரிக்காவின் முக்கிய எதிரியான ரஷியாவின் அதிபர் விளாடி மிர் புதினை சிறப்பு விருந்தினராக அழைத்து வர திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை சீன அரசு நேற்று வெளியிட்டது.
அங்கு சீன மக்கள் குடியரசு உருவான 1949–ம் ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தடவை 2–ம் உலகப்போரில் வெற்றி பெற்ற 70–ம் ஆண்டு விழா கொண்டாட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
அதையொட்டி நடைபெறும் ராணுவ அணிவகுப்பை பார்வையிட புதின் அழைக்கப்பட உள்ளார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே தீவிரமாக தொடங்கி விட்டன. இந்த தகவலை சீன பாதுகாப்பு துறை தலைவர் பு ஷென்குவா தெரிவித்தார்.

0 Comments