Ticker

6/recent/ticker-posts

உடல் எடையை குறைக்கும் ஐஸ் ஜெக்கெட்: நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு


அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த நாசா விஞ்ஞானி ஒருவர் உடல் எடையை குறைக்கும் ஐஸ் ஜெக்கெட்டை  கண்டுபிடித்துள்ளார். உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைப்பதென்பது எல்லோருக்கும் பெரிய கனவாக இருக்கிறது.   இணையத்திலும், தொலைக்காட்சியிலும் இதுபோல் வேலை செய்யாமல் உடல் எடையை குறைக்கும் எத்தனையோ உபகரணங்களை விளம்பரங்களாக நாம் பார்த்தபடி இருக்கிறோம். 

இந்நிலையில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், நாசாவின் ஜெட் ப்ரபல்சன் ஆய்வகத்தில் வருகை விஞ்ஞானியாகவும் பணிபுரியும் வேன் ஹேஸ் என்பவர் புதிதாக ஐஸ் ஜாக்கெட் என்ற உடல் எடையை குறைக்கும் கருவியை உருவாக்கியுள்ளார்.

பார்ப்பதற்கு கோட்டிற்கு உள்ளே அணியும் சட்டை போல இருக்கும் இதற்குள் குளிர்ந்த நீர் இருக்கும் இதை சட்டையைப்போல உடலில் அணிந்து கொள்ளலாம். சரி இதனால் எப்படி உடல் எடை குறையும் என்கிறீர்களா? 

ஐஸ் ஜெக்கெட்டில் உள்ள குளிர்ந்த நீரால் உடல் வெப்ப நிலை குறைவதால் அதை சமநிலைப்படுத்த நம் உடல் தனக்குள் உள்ள கலோரிகளை எரித்து உடலின் வெப்ப நிலையை அதிகரிப்பதால் நம் உடல் எடை குறைகிறது.  

இப்படியாக ஒரு நாளைக்கு 500 கலோரி வரை எரிக்க முடியும். வாரத்திற்கு 1 பவுண்டு வரை எடையை குறைக்க முடியும் என்கிறார் வேன். குளிரால் நடுங்குவோமோ என்று பயப்பட தேவையில்லை என்றும், ஜெக்கெட்டை அணிந்த சில நொடி மட்டுமே குளிர் இருக்கும், பின் உடலானது கலோரியை எரித்து வெப்பநிலையை அதிகரிப்பதால் குளிர் இருக்காது என்று வேன் விளக்கமளித்துள்ளார்.

Post a Comment

0 Comments