Ticker

6/recent/ticker-posts

அன்னப் பறவை இல்லாத வாக்குச்சீட்டுக்கள் விநியோகம்

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் சின்னமான ‘அன்னப் பறவை’  இல்லாத நிலையில், போலியான மாதிரி வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.கே.டி.எஸ். குணவர்தனவே இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்களினால் இந்த மாதிரி வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும்  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments