இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று சிட்னி நகரில் ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஜர்சும், வார்னரும் களமிறங்கினர்.
இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஜர்சும், வார்னரும் களமிறங்கினர்.
ரோஜர்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த வார்னர் வழக்கம் போல் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். இருவரும் இணைந்து பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய படியே இருந்தனர்.
குறிப்பாக உமேஷ் யாதவின் பந்து
எல்லைக்கோட்டை நோக்கி பறந்த படியே இருந்தது.
வார்னரின் அதிரடி ஆட்டத்தால் அவுஸ்திரேலிய அணி 48 பந்துகளில் முதல் 50 ஓட்டங்களை கடந்தது. உணவு இடைவேளை வரை இருவருரையும் பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.
அப்போது அவுஸ்திரேலியா அணி 28 ஓவரில் 123 ஓட்டங்களை குவித்ததுடன் ரோஜர்ஸ் 52 ஓட்டங்களுடனும், வார்னர் 63 ஓட்டங்களுடனும் களத்திலிருந்தனர்.
உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில் அந்த அணி 45 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் குவித்தது.
வார்னர் 114 பந்துகளில் 101 ஓட்டங்கள் குவித்து அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.
முதலாம் நாள் ஆட்டம் சற்று முன் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி 348/2 வலுவான நிலையில் உள்ளது. ஸ்டீவன் ஸ்மித் 82*, ஷேன் வாட்சன் 61*
முன்னதாக இப்போட்டிக்கான அணியில் இரு தரப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. அவுஸ்திரேலிய அணி தரப்பில் காயமடைந்த மிட்சல் ஜான்சனுக்கு பதிலாக ஸ்டார்க்குக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்திய அணி தரப்பில் டோனி, தவான், புஜாரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருக்கு பதிலாக சகா, ரெய்னா, ரோஹித் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பிடித்தனர்.

0 Comments