Ticker

6/recent/ticker-posts

தபால்மூல வாக்களிப்பில் அரசாங்க ஊழியர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதனை கண்டுபிடிக்க முடியாது.: மஹிந்த தேசப்பிரிய

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது அரசாங்க ஊழியர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதனை கண்டு பிடிக்க முடியாது.
தபால் மூல வாக்களிப்பின் போது ஓர் குறிப்பிட்ட வேட்பாளர் வெற்றியீட்டியுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை.
யாருக்கு வாக்களீத்தீர்கள் என தபால்
மூல வாக்காளர்களிடம் கேட்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
தாம் யாருக்கு வாக்களித்தோம் என்பது பற்றி வாக்காளர்களும் குறிப்பிடக்கூடாது.
வாக்களிப்பு நிலையங்களில் அளிக்கப்படும் வாக்குகள் யாருக்கு அளிக்கப்பட்டது என்பதனை கண்டு பிடிக்க முடியாது, இதனால் அச்சமின்றி வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments