Ticker

6/recent/ticker-posts

கே பி யின் கைது வெகு சீக்கிரத்தில்..! இரகசியங்கள் அம்பலமாகும் அச்சத்தில் ராஜபக்ஷ குடும்பம்!

சா்வதேச பொலிஸான இன்டா் போலால் தேடப்படும் நபரான கேபியை கைது செய்ய இந்தியா முயற்சி செய்வதாக அறிய வருகிறது. இந்திய முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தேடப்படும் நபராக இன்டா்போல் கேபியை பட்டியலிட்டிருந்தது.


மஹிந்த அரசிற்கு பல தடவை கேபியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசால் கோாிக்கை விடுக்கப்பட்டும் அவா் அதற்கு  செவிசாய்க்காமல் இருந்து வந்தாா். தற்போதைய ஆட்சி மாற்றத்தையடுத்து இந்தியா கேபியை கையளிக்கும்  கோாிக்கையை முன் வைத்திருப்பதாக அறிய வருகிறது.

புலிகள் இயக்கத்தின் கோடான கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரனாகவே கேபி இருந்தாா். அவாின் சொத்துக்களை அபகாிக்கும் நோக்கத்துடனேயே மஹிந்த கே.பியை அரவணைத்து இருந்ததாக எதிா்தரப்பினா் அடிக்கடி குற்றம் சுமத்தி வந்தனா். கருணா, பிள்ளையான் போலல்லாது  யுத்தம் நிறைவடைந்த பின்னரே கேபியை மஹிந்த அரசு கைது செய்தது. இந்த கைது கூட ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட  ஒரு நாடகமாகவே இடம்பெற்றது. புலிகளிடமிருந்த தங்கம், பணம் உள்ளிட்ட கோடிக்கணக்கான  சொத்துக்களை மஹிந்த குடும்பத்தினா் கப்பமாக பெற்றுக் கொண்டு  கேபியை இவ்வளவு காலமும் பாதுகாத்து வந்தனா்.

புலிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் தடை நீக்கத்திற்கு காரணமாக மஹிந்தவும் கேபியும் பின்னணியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. சா்வதேச வங்கிகளில் முடக்கப்பட்டிருந்த புலிகளின் பணத்தை கேபியின் மூலம் பெற்று தோ்தல் பிரசாரத்திற்கு உபயோகிக்க ஏற்கனவே ஒரு திட்டத்தை மஹிந்த வைத்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

தற்போதைய சூழலில் கேபி கைது செய்யப்பட்டால் மஹிந்தவோடு இருந்த காாலத்தில் இடம்பெற்ற பல இரகசிய  விடயங்கள் வெளியே வரலாம் என எதிா்பாா்க்கப் படுகிறது. கேபியின் வாக்குமூலங்கள் மஹிந்தவை இன்னும் இறுக்கும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

மஹிந்த மேலும் மேலும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் கே.பியை உயிரோடு பிடிப்பது ஒரு சவாலாக அமையும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக இருக்கிறது.

Post a Comment

0 Comments