எமது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தார். ஆனால் ஜனாதிபதி அதற்கு பதிலளிக்கவில்லை.
உலகத்தில் விவாதத்திற்கு பயந்த முதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆவார் என தெரிவித்த ஐக்கிய தேசியக்க கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனது ஊழல் விவகாரங்கள் வெளியில் தெரிந்துவிடுமே என்ற அச்சத்தினால்தான் பகிரங்க விவாதத்திற்கு வராமல் இருக்கிறார் எனவும் குறிப்பிட்டார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0 Comments