Ticker

6/recent/ticker-posts

போதைப்பொருள் கடத்தல் காரர்கள் இனி பாராளுமன்றம் வர தடை : ராஜித சேனாரத்ன



போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகள், எதனோல் முதலாளிமார் பாதாள உலகத்தினர் ஆகியோர் பாராளு மன்றத்துக்கு தெரிவாகும் இன்றிருக்கும் தேர்தல் முறையை மாற்றி கிராமத் திலுள்ள சாதாரண மனிதன் பாராளுமன்றம் செல்லும் தேர்தல் முறை யொன்றை துரிதமாக கொண்டுவர நட வடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பரகசியமாகவே இருந்த துமிந்த சில்வாவின் பாதாள உலக தொடர்பு தற்போது வெலே சுதாவின் வாக்குமூலத்தின் ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் தந்தையும் கொலையுண்ட முன்னாள் பா.உறுப்பினருமான பாரத லக்ஷ்மனின் 59வது பிறந்த தினத்தில் அவரது சிலைக்கருகில் மலர் வளையம் வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments