Ticker

6/recent/ticker-posts

பதவியை துறக்க நிபந்தனை விதிக்கும் நீதியரசர்

ற்போதைய பிரதம நீதியரசா் மொஹான் பீாிஸை பதவியில் இருந்து அகற்ற அரசு பல்வேறு வழிகளை தேடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இவர் இப்பதவியில் இருந்து ராஜினாமா செய்வதானால் தனக்கு அரசு ராஜ தந்திரியாக்கப்பட்டு வெளிநாட்டில் குறிப்பாக பிரித்தானியாவில் அல்லது பிரேசிலில் நியமனத்தை வழங்கவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.
எனினும் அரசு இவருக்கு இந்த நாடுகளில் பதவியை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள போதும் ரோம் நகருக்கு இவரை இராஜதந்திரியாக்க அரசு முடிவு செய்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜயசூரியா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசு இவரை ரோம் நகருக்கும் இலங்கை ராஜதந்திரியாக நியமிக்க முடிவு செய்துள்ள நிலையில் தற்போதைய நீதியரசர் இன்னும் தனது இராஜினாமாவை கையளிக்கவில்லை என்றும் கூறினார்.
இவரை இராஜினாமா செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை இவரின் நியமனம் அரசியல் நோக்கமுடையது என்றும் இவர் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுற்ற நிலையில் முன்னைய ஜனாதிபதி மகிந்தவுடன் அலரிமாளிகையில் புரட்சி ஒன்று சம்பந்தமான பேச்சுவார்ததையில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டும் இருப்பதாக ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments