தேர்தல் தினத்தன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்துக்கு வந்து சென்றதாக கூறப்படுவதை தேர்தல்கள் ஆணையாளர் மறுத்துள்ளார்.
தமது நினைவுப்படி கோத்தபாய ராஜபக்ச, இறுதியாக 2010 ஆம் ஆண்டிலேயே தேர்தல்கள் திணைக்களத்துக்கு வந்து சென்றதாக ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய செய்தியாளர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ராஜகிரிய தேர்தல்கள் திணைக்களம் மற்றும் வாக்குகள் கணக்கிடும் நிலையமான டி.எஸ்.சேனாநாயக்க ஆகியவற்றை இராணுவம் சுற்றி வளைத்ததாக வெளியான தகவலையும் தேசப்பிரிய நிராகரித்துள்ளார்.
எனினும் தேர்தல் தினத்தன்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதாக புரட்சி ஒன்றுக்கு முயற்சிக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தேசப்பிரிய எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
வன்முறைகள் ஏற்பட்டால், நிலைமையை கட்டுப்படுத்த இராணுவம் தயார் நிலையில் சில இடங்களில் நிறுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் தினத்தன்று எவரும் முடிவுகள் தொடர்பில் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்று கூறிய தேசப்பிரிய, அதிக ஆவண ஏற்றம் காரணமாக கனணிகளின் இயக்கம் தாமதமானதன் காரணமாகவே சிலவேளைகளில் முடிவுகள் தாமதமானதாக தேசப்பிரிய கூறினார்.

0 Comments