Ticker

6/recent/ticker-posts

விஹாரமாதேவி பூங்காவிற்கருகில் நபரொருவர் தீக்குளித்துள்ளார்.

எதிரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்து, நபரொருவர் தீக்குளித்துள்ளார்.
கொழும்பு விஹாரமாதேவி பூங்காவிற்கருகில் இன்று திங்கட்கிழமை காலை பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த 68 வயதான ஆணொருவரே, இவ்வாறு தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில், குறித்த நபர் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் தீக்காயங்களுக்குள்ளான குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments