பாப்பரசரின் இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கத்தோலிக்க சபை அறிவித்தது.
அதன் பிரகாரம், திட்டமிட்டபடி எதிர்வரும் 13ஆம் திகதி பாப்பரசர் தனது இலங்கை விஜயத்தை மேற்கொள்வார் என, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கத்தோலிக்க சபையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நாடு முழுதும் விஷேட ரயில் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Comments