Ticker

6/recent/ticker-posts

சங்கா உலக சாதனை நிகழ்த்தினார்

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 474 வீரர்களை ஆட்டமிழப்புச் செய்து உலக சாதனை நிகழ்த்தினார் சங்கக்காரா. இதன் மூலம் அடம் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்தார்.
நேற்று வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற 7 ஆவது ஒருநாள் போட்டியில் சங்கக்காரா 2 பிடிகளை பிடித்ததன் மூலம் 474  ஆட்டமிழப்புகளுக்கு காரணமானவர் என்ற வகையில் அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அடம் கில்கிறிஸ்ட் (472) சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
விக்கெட் காப்பாளர்களில் தற்போது சங்கக்காரா 474 முதலிடத்திலும், கில்கிறிஸ்ட் 472, மார்க் பவுச்சர் 424, தோனி 314 ஆகியோர் முதல் 4 இடங்களிலும் உள்ளனர்.
இவர் சிறிது நாட்களுக்கு முன்னரே ஒருநாள் போட்டியில் இலங்கை சார்பாக அதிகூடிய ஓட்டங்கள் பெற்றவர் என்ற சாதனையை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments