ஆளும் தரப்புடன் இணைந்து கொள்ளுமளவுக்கு எனக்கு ஒன்றும் பைத்தியம் பிடிக்கவில்லை. நான் அரசுடன் இணைந்து கொள்ளவிருப்பதாக பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்பவர்கள், எங்களுக்கு சேறுபூசவே முயற்சிக்கின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தில் இணைந்துகொள்ள வேண்டிய தேவையும் எனக்கில்லை’ என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச, ஆளுங்கட்சியில் இணைந்துகொள்ளப்போகிறார் என்ற வதந்தி பரவியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு ஊடகமொன்றுக்கு பதிலளித்துள்ளார்.

0 Comments