Ticker

6/recent/ticker-posts

ஜீ.எல் பீரிஸ் CID விசாரணையில்..!

னாதிபதி தேர்தல் தினமான ஜனவரி 8 ஆம் திகதி இரவு அலரிமாளிகையில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சூழ்ச்சி தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை முன்னாள் வெளிவிவகார அமைச்சரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சூழ்ச்சி குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முறைப்பாடு செய்திருந்தார்.
இதன் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவிடம் நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments