தென்கொரிய தலைநகர் சியோல் அருகே மூடுபனி காரணமாக சுமார் 100 கார்கள் அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் 2 பேர் உயிரிழந்தனர். 65 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சியோல் அருகே இன்சியான் சர்வதேச விமான நிலையம் உள்ளது. சியோல் நகரையும் விமான நிலையத்தையும் இணைக்கும் வகையில் பிரமாண்ட நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சியோலில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று (11) காலையில் நெடுஞ்சாலையின் பிரதான பாலத்தில் இரண்டு கார்கள் மோதின.
இதைத்தொடர்ந்து இருபுறமும் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதி நொறுங்கின. ஒட்டுமொத்தமாக சுமார் 100 ற்கும் மேற்பட்ட கார்கள் சம்பவ இடத்தில் முட்டி மோதின. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 65 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
0 Comments