கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு இன்று முதல் இரவு 10 மணி வரை இயங்கவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு இதுவரை காலமும் இரவு எட்டு மணி வரை இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments