Ticker

6/recent/ticker-posts

திஸ்ஸ அத்தநாயக்கா எதிர்வரும் 11ம் திகதி வரையில் விளக்க மறியலில்


ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளாா்.

இன்று காலை குற்றப்புலனாய்வு பணியகம் திஸ்ஸ அத்நாயக்காவை கைது செய்தது.  மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாகவும், இந்த இணைவின் பின்னணியில் சா்வதேச சதி ஒன்று இருப்பதாகவும்  திஸ்ஸ அத்தநாயக்க பிரச்சாரம் செய்து வந்தாா்.

ரணில் மைத்திரி செய்து கொண்டதாக பல ஆவணங்களையும் அத்தநாயக்க ஊடகங்களுக்கு சமர்ப்பித்திருந்தார். குறித்த ஆவணம் போலியானது எனவும் அதற்கான ஆதாரங்கள் உண்டு எனவும் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  விசாரணை நடத்துவதற்காக திஸ்ஸவை விளக்க மறியலில் வைக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தை கோாியதால் எதிா் வரம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாாிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Post a Comment

0 Comments