Ticker

6/recent/ticker-posts

போதை பொருள் விற்று கொட்டகலையை நாசமாக்கிய சந்தேகநபர் கைது: மக்கள் போராட்டம் வெற்றி!!

ஹட்டன் - கொட்டகலை வூட்டன் தோட்ட பகுதியில் போதை பொருள் விற்பனை செய்யும் ஒருவரை கைது செய்யுமாறு கோரி குறித்த தோட்டத்தின் தொழிலாளர்கள் உட்பட தோட்ட அதிகாரிகள் 02.02.2015 இன்று காலை 9 மணியளவில் தோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 
இந்த சந்தேகநபர் பொலிஸாரின் உதவியுடன் பல காலங்களாக போதைபொருள் விற்பனை செய்து வருவதாகவும் அதனால் தமது பிள்ளைகள் உட்பட சமூகமும் சீர்குழைந்து செல்வதாகவும் தோட்ட அதிகாரியின் அனுமதி இல்லாமல் குறித்த நபர் தன்னுடைய வீட்டை அபிவிருத்தி செய்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. 

அதன் பின் சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்டபோது கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பின்னர் மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். 

சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்... 

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் பல காலங்களாக போதை பொருள் விற்பனை செய்து வந்ததாகவும் அதற்கு அவர் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். 

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார் என்றும் பொலிஸார் கூறினர்.

Post a Comment

0 Comments