Ticker

6/recent/ticker-posts

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள 1,195 இந்தியர்களின் பட்டியல் வெளியானது விசாரணை நடத்த மத்திய அரசு உறுதி

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள 1,195 இந்தியர்களின் பட்டியல் வெளியானது. அவர்களைப் பற்றி விசாரணை நடத்த உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணம் போட்டு வைத்துள்ள 628 இந்தியர்களின் பட்டியல், கடந்த 2011–ம் ஆண்டு, பிரான்சு நாட்டு அரசிடம் இருந்து இந்திய மத்திய அரசுக்கு கிடைத்தது. அந்த பட்டியலில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments