Ticker

6/recent/ticker-posts

ஐ.தே.க முக்கியஸ்தர்களின் ஊழல் மோசடிகளை கண்டறிய சுதந்திரக் கட்சி விசேட குழு அமைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் கண்டறிய விசேட குழுவொன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நியமித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள்.

2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட உள்ளது.
பத்து பேர் அடங்கிய நாடாளுமன்றக் குழுவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக கிரமமான அடிப்படையில் கையூட்டல் மற்றும் ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்றக் குழுவினர் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பத்து ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக இந்த வாரத்தில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
அதற்கான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, கோப் குழுவில் அங்கம் வகித்த காலத்தில் கண்டறிந்து கொண்டு வெளிப்படுத்திய தகவல்களை ஆதாரமாகக் கொண்டு இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த காலத்தில் கோப் குழுவின் உறுப்பினராக விசாரணை நடத்தி,  நாடாளுமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments