சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச் 6ம் திகதிவரை விளக்கமறியலில்
வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் போதிராஜ மாவத்தையில் உள்ள 287 கடைகளிலும் 5ம் குறுக்கு வீதியில் உள்ள 537 கடைகளிலும் 180 லட்சம் ரூபா கப்பம் பெற்றுள்ளதாக குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதனால் கொழும்பு மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய 108 மில்லியன் இல்லாது போயுள்ளதென நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 லட்சம் வெட் வரியும் இல்லாது போயுள்ளது.
குற்றச்சாட்டுக்கள் பொய் எனக் கூறிய பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி பிணை கோரியபோதும் சாட்சியாளர்கள் மிரட்டப்பட வாய்ப்பு உள்ளதால் பிணை வழங்க வேண்டாம் என வழக்கு தொடுநர் சார்பான சட்டத்தரணி கேட்டுக் கொண்டார்.
இதனை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்தார்.
0 Comments