Ticker

6/recent/ticker-posts

மங்கள ஜெனீவா பயணம்!

ஜெனீவாவில் இடம்பெறவுள்ள உயர்மட்ட கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தில் மார்ச் 2ம் திகதி இந்த உயர்மட்ட கூட்டம் இடம்பெறவுள்ளது. 

இந்த உயர்மட்ட கூட்டத்தில் 65 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார

அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். 

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உயர்மட்ட கூட்டத்தின் பின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஷெயித் அல் ஹுஸைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இதில் இலங்கை குறித்து தாக்கல் செய்யப்படவிருந்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. 

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அறிக்கை தாக்கல் செய்வதை ஐ.நா மனித உரிமை ஆணையகம் பிற்போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments