Ticker

6/recent/ticker-posts

நிர்ணய விலைக்கு மேலாக பொருள்கள் விற்பனையா? 1977 க்கு அழையுங்கள்

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேலாக பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக 1977 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவுசெய்துகொள்ள முடியும்
அத்துடன் மக்களுக்கு வழங்கப்பட்ட பொருள்களின் விலை குறைப்பு சலுகைகளை வழங்க மறுக்கும் வியாபார நிலையங்களுக்கு எதிராக கடும் சட்டத்தை அமுல்படுத்துமாறு கைத்தொழில் வனிகத் துறை அமைச்சர் ரிஷாட் 
பதியுத்தீன் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 
 நிர்ணய விலைக்கு மேலாக பொருள்கள்  விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் 1,500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும்  தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.
 இதன்படி அதிக விலைக்கு மண்ணெண்ணை விற்கப்பட்டமை தொடர்பிலேயே கூடுதலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த அமைப்பின்  தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய வரவு செலவுத்திட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொருள்களை நுகர்வோருக்கு வழங்காத வர்த்தகர்களை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.எம்.டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments