தற்பொழுது ஆபாச பதிவுகளிலிருந்து வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் இதனால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேஸ்புக் பயனாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
மேலும் ஒருவரின் பேஸ்புக் கணக்கு இந்த வைரஸால் தாக்கப்பட்டால், அது தானாகவே அவரின் நண்பர்களின் கணக்குகளிலும் போஸ்ட் செய்யப்படும். எனவே பேஸ்புக்கில் உலா வரும் ஆபாச படங்கள் எதையும் கிளிக் செய்யாமல் இருப்பது இந்த வைஸ் வராமல் தடுப்பதற்கான ஒரு வழியாகும்.
உங்கள் பேஸ்புக் கணக்கில் வைரஸ் வந்திருப்பதை நீங்கள் அறிந்தால் உடனே உங்கள் கடவுச்சொல்லை (Password) மாற்றுங்கள். கையடக்கத் தொலைபேசி மூலம் Log In செய்திருந்தால் அதனை உடனே Log Out செய்துகொள்ளுங்கள்.

0 Comments