Ticker

6/recent/ticker-posts

1992 அயோத்தி கலவரம், சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்தப்படவேண்டும் இஸ்லாமிய குழுக்கள் வலியுறுத்தல்

1992 அயோத்தி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்தப்படவேண்டும் என்று இஸ்லாமிய குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதையடுத்து, கலவரங்கள் வெடித்தது. இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்தப்படவேண்டும் என்று இஸ்லாமிய குழுக்கள் உத்தரபிரதேச அரசிடம் வலியுறுத்தியுள்ளன. 1984 சீக்கிய கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ. 5 லட்சம் நிதிஉதவி அளிக்கப்படும் என்று மாநிலத்தின் அகிலோஷ் யாதவ் அரசு அறிவித்ததையடுத்து இந்த கோரிக்கை வலுவாகியுள்ளது.

அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி வரையில் நீடித்த வன்முறை சம்பங்களில் 20க்கும் மேற்பட்டோர்கள், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரால் கொல்லப்பட்டனர் என்றும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படவில்லை என்றும் இதில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் யார்மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் இஸ்லாமிய அமைப்புகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அயோத்தி படுகொலையில் உயிரிழந்தோர்கள் குடும்பத்திற்கு நாங்கள் இழப்பிடு எதுவும் நாங்கள் வலியுறுத்தவில்லை. அயோத்தி படுகொலை தொடர்பாக மாநிலஅரசு சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம். 

படுகொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. யாருக்கு எதிராகவும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படவில்லை. போலீசார் யாருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை." என்று இஸ்லாமிய குழுவின் தலைவர் அப்சால் அகமது கான் தெரிவித்துள்ளார். "நாங்கள் நீதியைதான் கேட்கிறோம், அப்போதுதான் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடைபெற்ற கலவரத்தில் அப்பாவி மக்களை கொலை செய்தவர்கள் யார் என்று உலகிற்கு தெரியவரும். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் ஒரு மாதத்திற்குள்ளேயே இறுதி அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது." என்று கான் தெரிவித்துள்ளார். 

அகமது கான் அயோத்தி கலவரத்தின் போது நிவாரண முகாம்களில் பணியாற்றியவர். 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக மத்திய அரசு 31 ஆண்டுகளுக்கு பின்னர் சிறப்பு புலனாய்வு குழுவை விசாரணைக்கு அமர்த்தும் நிலையில், மாநிலத்தில் உள்ள சமாஜ்வாடி அரசு 1992 அயோத்தி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும், நீதி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய குழுக்களின் இந்த வலியுறுத்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள மூத்த சமாஜ்வாடி தலைவர் ஜெய் சங்கர் பாண்டே, சமாஜ்வாடி அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments