2016ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுப்பிரமணியனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அவர்,
2016ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதற்கு முன்னோட்டமாக ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜகவை வெற்றி பெற செய்ய வேண்டும். கடந்த 60 ஆண்டுகள் ஆட்சிகளில் தமிழக மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றார்.

0 Comments