சிறுவன் ஒருவரை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏதுவான வகையில் செய்தி ஒன்றை தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுயாதீன தொலைக்காட்சியின் பிரதி பணிப்பாளர் சுதர்மன் ரதலியகொட எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.
சுதர்மன் ரதலியகொட இன்று (10) சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்தார்.
குறித்த விளம்பரச் செய்தி தயாரிப்பிற்கு தனது கட்சிக்காரர் பொறுப்பு கூற வேண்டியதில்லை எனவும் நிறுவனத் தலைவரின் உத்தரவையே அவர் செயற்படுத்தியதாகவும் சுதர்மன் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

அதன்படி, சுயாதீன தொலைக்காட்சியின் அப்போதைய தலைவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு மேலதிக நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
எனினும் சம்பவம் தொடர்பான விசாரணை நிறைவு பெறாததால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சுதர்மனை எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

0 Comments