Ticker

6/recent/ticker-posts

விமல் வீரவன்சவின் ஹெலிகாப்டர் பயணித்திற்கான செலவு 4 மில்லியனுக்கு மேல்!


முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் அவர் கீழ் இருந்த அமைச்சர்களும் பயன்படுத்திய  இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களுக்கான கொடுப்பனவு  30.48 மில்லியன் ரூபா என ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை விமானப்படை ஹெலிகப்டர்களில்  2014 டிசம்பர் 01 முதல் 2015 ஜனவரி 09 வரை நாமல் ராஜபக்‌ஷ, பசில் ராஜபக்‌ஷ, விமல் வீரவன்ச, சுசில் பிரெம்ஜயந்த, தினேஷ் குனவர்தன , திஸ்ஸ விதாரன,  தயாசிறி ஜயசேகர இவர்கள் அனைவரும்  138 தடவைகள் பயணித்துள்ளனர்.
நாமல் ராஜபஷவின் ஹெலிகாப்டர் பயணித்திற்கான செலவு 15.08 மில்லியன்களாகும்.
பசில் ராஜபஷவின் ஹெலிகப்டர் பயணித்திற்கான செலவு 4.8 மில்லியன், விமல் வீரவன்சவின்ஹெலிகப்டர் பயணித்திற்கான செலவு 5.8 மில்லியன் , தயாசிறியின்ஹெலிகாப்டர் பயணித்திற்கான செலவு3.9 மில்லியன்  மற்றும்  சுசில் பிரேமஜயந்தவின் ஹெலிகாப்டர் பயணித்திற்கான  செலவு 1 மில்லியன்  ஆகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷவின் ஹெலிகப்டர் பயணித்திற்கான செலவு 2.2 மில்லியன் என ராவய செய்திப்பத்திரிகை தகவல்கள் வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments