லிபியாவில், குப்பா நகரில் வெள்ளிக்கிழமை, கார்களில் வெடிகுண்டுகளை நிரப்பிவந்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர்.
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் லிபிய துணைக் கிளை இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
லிபியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள், 21 கிறிஸ்துவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து அவர்கள் கழுத்தை அறுத்துக் கொன்றதை அடுத்து, எகிப்து அரசு நடத்திய விமானத் தாக்குதலைக் கண்டித்து இந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலை, கப்பா நகரில் இருக்கும் அரசு அலுவலங்கள், நாடாளுமன்றக் கட்டடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

0 Comments