அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் இருவர் முல்லைத்தீவில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் அண்மையில் இவ்வாறு முல்லைத்தீவிற்கு விஜயம் செய்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வட மாகாணசபையின் உறுப்பினர் ரீ.ரவிகரனின் இல்லத்தில் இந்த ரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரிகளான ஜோசப் ஸ்கூகலர் மற்றும் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் அப்லேன் ஜேன் ஆகியோரே இவ்வாறு இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அண்மையில் வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனவழிப்பு தீர்மானம் தொடர்பிலும் இந்த இரகசிய சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Comments