சிலி நாட்டில் 53 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 34 பயணிகளுடன் ஓசார்னோவில் இருந்து சான்டியாகோவுக்கு சென்ற இந்த விமானம் கடந்த 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி காணாமல் போனது.
இந்த விமானத்தில் சிலியின் பிரபல கிரீன் குரொஸ் Green Cross என்ற கால்பந்து அணியின் வீரர்கள், பயிற்சியாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.
இதனிடையில் சான்டியாகோவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மாலே பகுதியில் உள்ள மலையில் இந்த விமானத்தின் பாகங்கள் இருந்ததாக மலையேறும் வீரர்கள் சிலி அரசுக்கு தெரிவித்துள்ளனர்.
மலையில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தின் பாகங்களும், மனித எலும்புகளும், பல்வேறு பொருள்களும் சிதறிக்கிடந்தன. மலையேற்ற வீரர்கள் இதை வீடியோவில் படம் பிடித்து அரசுக்கு கொடுத்துள்ளனர்.
1953ம் ஆண்டு விமானத்தில் பயணம் செய்த கிரீன் குரொஸ் கால்பந்து வீரா்கள்
0 Comments