Ticker

6/recent/ticker-posts

கையடக்க தொலைபேசியில் காலத்தை செலவிடும் ஜப்பான் மாணவிகள் !

ஒரு நாளில் 7 மணி நேரத்தை கையடக்க தொலை பேசியில் ஜப்பான் பாடசாலை மாணவிகள் செலவிடுகின்றனர். சமீபத்தில் ஜப்பானில் உள்ள டிஜிட்டல் ஆர்ட்ஸ் என்ற ஒரு தனியார் நிறுவனம் இளைஞர்களின் தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு கணிப்பை மேற்கொண் டது.

அதில் ஜப்பானில் படிக்கும் 96 சதவீத உயர் நிலை பாடசாலை மாணவ, மாணவிகள் கையடக்க தொலைபேசி வைத்திருப்பது தெரிய வந்தது.
அதே நேரத்தில் கனிஷ்ட, உயர்நிலை பாடசாலை மாணவ, மாணவிகளில் 60 சதவீதம் பேர் தொலைபேசி பயன்படுத்துகின்றனர். இவற்றில் உயர்நிலைப் பாடசாலை மாணவிகள் சரா சரியாக ஒரு நாளில் 7 மணி நேரத்தை தொலைபேசியில் செலவிடுகின்றனர்.
10 சதவீத மாணவிகள் ஒரு நாளில் 15 மணி நேரத்தை தொலைபேசியில் கழிக்கின்றனர். அதே வயது மாணவர்கள் 4 மணி நேரத்தை மட்டுமே தொலை பேசியில் செலவிடுகின் றனர்.
கையடக்க தொலைபேசிகளில் தகவல்கள் பரிமாற்றம், கேம்ஸ், சினிமா படங்கள் பார்த்தல், போன்றவற்றுக்காக பயன்படுத்துகின்றனர் என்றும் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

Post a Comment

0 Comments