முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தார், மற்றும் ஊழல்வாதிகளுக்குகு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும்போது, பொலிஸ் துறைக்கு பொறுப்பாகவுள்ள அமைச்சர் ஜோன் அமரதுங்க விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதாகவும், பக்கச் சார்பாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திாி இவாின் செயற்பாட்டால் கடும் கோபம் கொண்டிருப்பதாக அறிய வருகிறது. ஊழல்கள் தொடா்பாக பல சான்றுகள் கிடைக்கப்பெற்றும் இதுவரை விசாரணை என்ற போா்வையில் காலம் தாழ்த்தும் திட்டமிட்ட செயற்பாடே இடம் பெற்று வருவதாகவும் இதற்கு பின்னணியில் ஜோன் அமரதுங்கவின் அதிகாரம் இருப்பதாகவும் அறிய வருகிறது.
முன்னைய ஆட்சிக் காலத்தில், எதிரணியில் இருந்து கொண்டு ஜோன் அமரதுங்க, மஹிந்தவுக்கு நெருக்கமான சிலருடன் வர்த்தக மற்றும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த தரப்புக்குத் தாவும் எண்ணத்தில் இருந்த இவர், கடைசி நேரத்தில் அந்த நிலைப்பாட்டைக் கைவிட்டிருந்தார்.
எதிர்க்கட்சி இவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர முயற்சிக்கும் தறுவாயில்கூட, தனி ஆர்வம் காட்டி தனக்கு மிக நெருக்கமான இவரைப் பாதுகாக்கும் முயற்சிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


.jpg)
0 Comments