Ticker

6/recent/ticker-posts

துமிந்தவைக் காப்பாற்றும் நல்லாட்சிக் காரர்கள்?

துமிந்த சில்வா விவகாரம் அரசியல் தளத்தில் சூடுபிடித்திருக்கிறது. புதிய அரசு இவரின் கைது தொடா்பில் தாமதத்தை கடைப்பிடித்து வருவதாக பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனா். ஐ.தே.க வின் பெரும் புள்ளிகள் இவா் மீது நடவடிக்கை எடுப்பதை தடுத்து வருவதாக கதைகள் வெளிவர தொடங்கியுள்ளன.

போதைப் பொருள் விடயமாக சாதாரண மக்கள் கைது செய்யப்பட்டால் அவா்களை வைத்து தட்டித் தகா்க்கும் காவல்துறை முக்கிய புள்ளிகளை வைத்து விசாரணை நாடகம் நடாத்தி காலம் தாழ்த்தி வருவதை பலரும் கண்டிக்க ஆரம்பித்திருக்கின்றனா்.
துமிந்த சில்வாவிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் குறித்து விசாரணை செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்ககள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும். ஏற்கனவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வெலே சுதாவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 75 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, துமிந்த சில்வா கைது செய்யப்படாமைக்கு ஆளும் கட்சியின் ஒரு தரப்பினரும் ஜே.வி.பியும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments