Ticker

6/recent/ticker-posts

பிணைக்கைதியை கொடூரமாக கொலை செய்த ஐ.எஸ்


சிரிய இராணுவத்தை சேர்ந்த பிணைக்கைதியை ஐ.எஸ் தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்று வெளியான புதிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ,எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நாள்தோறும் ஒரு பிணையக்கைதியை தலைத் துண்டித்து, அதை வீடியோவாக எடுத்து இணையதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துவதை வாடிக்கையாய் கொண்டுள்ளனர்.
 நேற்று சிரியா ராணுவத்திற்கு தொடர்புடையதாக கருதப்படும் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வது போல புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அந்த அமைப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், காவிநிற உடையுடன் சிரிய இராணுவத்தை சேர்ந்த பிணைக்கைதி ஒருவன் மண்டியிட்டப்படி உள்ளான்.
அவன் அருகே உள்ள தீவிரவாதி அரேபியா மொழியில் ஆத்திரத்துடன் ஏதோ சில வார்த்தைகள் பேசுகிறான்.
இதன்பின் அவனை நோக்கி வீசப்படும் துப்பாக்கியை பிடித்த அந்த தீவிரவாதி, பிணையக்கைதியின் தலையை நோக்கி குறிவைத்து சுடுகிறான்.
அப்போது குண்டுபாய்ந்த வேகத்தில் முன்னோக்கி கீழே விழும் அந்த நபர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறப்பதுபோல் அந்த வீடியோவில் காட்சிகள் பதிவாகியுள்ளன.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் தொடரும் இந்த வெறியாட்டங்களுக்கு கடந்த 6 மாதங்களில் சுமார் 2000 பேர் பலியாகியுள்ளனர் என்றும், இவற்றில் பெரும்பாலானோர் அப்பாவி குடிமக்கள் எனவும் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments