Ticker

6/recent/ticker-posts

வீட்டு வாசலில் பனிக்கட்டியை அகற்றாமையால் ஜோன் கெர்ரிக்கு அபராதம்


அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக பூஸ்டன் நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
இப்பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரியின் வீட்டின் முன் தேங்கிய 2 அடி உயரமான பனிக்கட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரியின் வீடு பாஸ்டன் நகரில் பீகான் மனு பகுதியில் பீங்னி தெருவில் அமைந்துள்ளது. அவரது வீட்டு முன் தேங்கிய பனிக் கட்டிகளை அகற்ற ஜோன் கெர்ரி நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறி, அவருக்கு 50 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
உடனடியாக, வீட்டு முன் தேங்கியிருந்த பனிக்கட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்த ஜோன்கெர்ரி, அபராதத்தையும் செலுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments