தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து செயற்படவேண்டுமென முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல், தென், மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய ஆறு மாகாணங்களின் முதலமைச்சர்கள் அண்மையில் கொழும்பில் கூடி கலந்துரையாடி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் உருவாக்கப்பட்ட இந்த மூன்று ஜனாதிபதிகளும் இணைந்து செயற்படுவதன் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலை வெற்றிகொள்ள முடியுமென தெரிவித்துள்ளனர்.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மீது பிரயோகிக்கப்பட்டு வரும் தொடர் அழுத்தங்களை நிறுத்துவதற்கு ஆவண செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments