Ticker

6/recent/ticker-posts

நைஜீரியாவில் ஜனாதிபதியை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் !


நைஜீரியாவில் ஜனாதிபதியை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் இம்மாதம் 14-ந்தேதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி குட்லக் ஜோனதனும், அனைத்து முற்போக்கு காங்கிரஸ் (ஏ.பி.சி) சார்பில் முன்னாள் இராணுவ ஆட்சியாளா் முகம்மது புகாரியும் போட்டியிடுகிறார்கள். தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கையில் போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.



இந்தநிலையில் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள காம்பே நகரில் நேற்று மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி குட்லக் ஜோன்னதன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தவுடன் அவர் புறப்பட்டு சென்றார். சிறிதுநேரத்தில் கார் நிறுத்தும் இடத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அந்த இடத்தில் 2 பெண்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகள் என்று போலீசார் தெரிவித்தனர். தேர்தலை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று தெரிகிறது. 

இதில் 18 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

Post a Comment

0 Comments