Ticker

6/recent/ticker-posts

நுகேகொட கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாக மேல் மாகாண முதலமைச்சர் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைப் பிரதமர் வேட்பாளராக மாற்றும் நுகேகொடயில் இன்று நடைபெறும் கூட்டத்தில் தான் மனச்சாட்சியின் அடிப்படையில் கலந்து கொள்ளவுள்ளதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவித்துள்ளார்.
மேல் மாகாண சபையில் 40 உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மம்பில குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இக்கூட்டத்தில் தனது கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளக் கூடாதென தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments