Ticker

6/recent/ticker-posts

ஹூலுகல்ல, கெஹெலியவின் மகள் ஆகியோர் மீள் அழைக்கப்பட்டனர்!


வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள இரண்டாம் நிலை அதிகாரிகள் 36 பேரை திருப்பி அழைக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த 36 பேர் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் என தெரியவருகிறது. மேற்படி தீர்மானம் கடந்த 4 ஆம் திகதி எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் லக்ஷ்மன் ஹூலுகல்ல, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல உள்ளிட்டோர் திருப்பி அழைக்கப்பட உள்ளனர்.
நாடு திரும்ப இவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாக நியமனங்களை பெற்ற தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் 29 பேர் இதற்கு முன்னர் திருப்பி அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments