துறைமுக அதிகார சபை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக துறைமுக, விமான, விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் நலன்புரி செயல்திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக நேற்று (12) பிற்பகல் துறைமுக அதிகார சபையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் பின்னர் அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களில் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் நிறுவனங்களில் துறைமுக அதிகார சபையும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments