செசரியாவின் பண்டைய துறைமுகப் பகுதியில் இஸ்ரேலில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரிய தங்க நாணயப் புதையல் இதுவென இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடலுக்கடியில் புதையல்களை தேடும் சுழியோடிகளின் குழுவென்றினாலேயே இந்த தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 2,000 தங்க நாணய குற்றிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவை சுமார் ஒன்பது கிலோகிராம் எடைகொண்டது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர், இவை விலைமதிப்பற்றவை என்று அவர்கள் விபரித்துள்ளனர். இந்த தங்க நாணயங்கள் பாதிமித் கலீபத் காலப்பகுதிக்குரியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் பேரரசான பாதிமியத் கலீபத் கி.பி. 909 முதல் 1171 வரை மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் பெரும் பகுதியை ஆட்சி செய்து வந்தது. எகிப்தில் இருந்த மத்திய அரசுக்கு வரிப்பணத்தை ஏற்றிச் சென்ற கப்பல் விபத்துக்குள்ளானதில் இந்த நாணயங்கள் கடலில் புதையுண்டிருக்கலாம் என்று இஸ்ரேல் தொல்பொருள் நிபுணர் கொபி ஹெர்வித் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை செசரியாவில் நகரை பாதுகாக்கும் பாதிமியத் படையினருக்கு சம்பளம் வழங்க கொண்டு வந்த நாணயங்களாகவும் இவை இருக்கலாம், அதேபோன்று பாரிய வர்த்தக கப்பல் ஒன்றின் நாணயங்களாகவும் இருக்கலாம் என்று ஹெர்வித் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதையல் அரச சொத்தாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அதனை கண்டுபிடித்தவர்களுக்கு எந்தவொரு கொடுப்பனவும் வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments